உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரிஸ் டிமென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரிஸ் டிமென்ட்
ஓல்ட் செட்லரின் இசை விழாவில் ஐரிஸ் டிமென்ட் - டிரிஃப்ட்வுட், டெக்சாஸ், 2007
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஐரிஸ் லுல்லா டிமென்ட்
பிறப்புசனவரி 5, 1961 (1961-01-05) (அகவை 63)
பாராகோல்ட், ஆர்கான்சாஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இசை வடிவங்கள்நாட்டுப் பாட்டு, அமெரிக்கானா, நற்செய்தி இசை, நாட்டுப்புறம்.
தொழில்(கள்)பாடகர் - பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, கித்தார், கின்னரப்பெட்டி
இசைத்துறையில்1991 முதல் தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்ரவுண்டர் ரெக்கார்ட்ஸ் (பிலோ), வார்னர் பிரதர்ஸ், ஃப்ளாரெல்லா ரெக்கார்ட்ஸ்
இணைந்த செயற்பாடுகள்கிரெக் பிரௌன், ஜான் ப்ரின்
இணையதளம்www.irisdement.com

ஐரிஸ் லுல்லா டிமென்ட் (Iris Luella DeMent) (பிறப்பு: 1961 சனவரி 5) [1] இவர் இரண்டு முறை கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்க பாடகரும் மற்றும் பாடலாசிரியரும் ஆவார். டிமென்ட்டின் இசை பாணியில் நாட்டுப்புறம், நாடு மற்றும் நற்செய்தி இசையின் கூறுகள் உள்ளன.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

டிமென்ட், ஆர்கன்சாசின் பராகோல்டில் [2] பாட் டிமென்ட் மற்றும் மனைவி புளோரா மே ஆகியோரின் 14 வது மற்றும் இளைய குழந்தையாக பிறந்தார்.[3] ஐரிஸின் தாயார் நாஷ்வில் சென்று பாடும் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற கனவுகளைக் கொண்டிருந்தார். திருமணம் செய்து கொள்வதற்காக அந்தத் திட்டங்களை அவர் நிறுத்தி வைத்திருந்தாலும், அவரது பாடும் குரல் அவரது இளைய மகள் ஐரிஸுக்கு ஒரு உத்வேகமாகவும் செல்வாக்காகவும் இருந்தது.[4] டிமென்ட் ஒரு பெந்தகோஸ்துவாக வீட்டில் வளர்க்கப்பட்டார். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இவரது குடும்பம் ஆர்கன்சாசிலிருந்து லாஸ் ஏஞ்சலஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தது. இவர் வளர்ந்து வரும் போது, நாட்டுப்புற இசை மற்றும் நற்செய்தி இசை மூலம் தனனை வெளிப்படுத்தி செல்வாக்கு பெற்றார்.[5] தனது ஐந்தாவது வயதில் "தி லிட்டில் டிமென்ட் சிஸ்டர்" இல் ஒருவராகப் பாடிய ஐரிஸ், தனது முதல் நிகழ்ச்சியின் போது பாடல் வரிகளை மறந்த ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. இதனால் அவர் சிறிது காலம் பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்.

ஓல்ட் செட்லரின் இசை விழாவில் ஐரிஸ் டிமென்ட் - டிரிஃப்ட்வுட், டெக்சாஸ், 2007

இசை மற்றும் தொழில்

[தொகு]

டிமென்ட் தனது முதல் பாடலான "அவர் டவுன்" என்பதை 25 வயதில் மிட்வெஸ்ட் நகரத்தின் வழியாக எழுத உந்துதலால் பெற்றார்.[4] பாடல் வரிகள் இவருக்கு "இப்போது இருப்பதைப் போலவே", மீண்டும் எழுதத் தேவையில்லாமல் வந்தன. மேலும் பாடல் எழுதுவதே வாழ்க்கையில் தனக்கு அழைப்பு என்று அப்போது உணர்ந்தார். சிபிஎஸ் தொலைக்காட்சி நிறுவனத்தின் தொடரான நார்தர்ன் எக்ஸ்போசரின் இறுதி அத்தியாயத்தில் (1995 சூலை 26) இறுதிக் காட்சியின் போது "அவர் டவுன்" இசைக்கப்பட்டது. இந்த பாடலை கேட் ரஸ்பி, கேட் பிரிஸ்லின் & ஜோடி ஸ்டெச்சர் பதிவு செய்துள்ளனர் .

இவரது முதல் தொகுப்பு இன்பேமஸ் ஏஞ்சல் என்பது 1992இல் ரவுண்டர்-பிலோ நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டது. இது மத சந்தேகம், சிறு நகர வாழ்க்கை மற்றும் மனித பலவீனம் போன்ற கருப்பொருள்களை ஆராய்ந்தது. "லெட் தி மிஸ்டரி பீ" 10,000 மானியாக்ஸ் மற்றும் ஆலிஸ் ஸ்டூவர்ட் உட்பட பல கலைஞர்களால் ஒத்துழைப்பும் இருந்தது. மேலும் இது லிட்டில் புத்தா என்ற திரைப்படத்தின் தொடக்க காட்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

1994 இல் வெளியான இவரது இரண்டாவது தொகுப்பான மை லைப்பில், இவர் தனிப்பட்ட மற்றும் உள்நோக்க அணுகுமுறையைத் தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தைக்கு இந்த பதிவு அர்ப்பணிக்கப்பட்டது. மை லைப் சிறந்த தற்கால நாட்டுப்புற இசைத் தொகுப்புப் பிரிவில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[6]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

டிமென்ட் 1991இல் எல்மர் மெக்கால் என்பவரை மணந்தார். ஆனால் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

இவர் பாடகர்-பாடலாசிரியர் கிரெக் பிரவுனை 2002 நவம்பர் 21 அன்று இரண்டாவதாக மணந்தார். இவர்கள் தத்தெடுக்கப்பட்ட, உருசிய மகளுடன் கிராமப்புற தென்கிழக்கு அயோவாவில் வாழ்கின்றனர்.[7][8]

குறிப்புகள்

[தொகு]
  1. "UPI Almanac for Saturday, Jan. 5, 2019". United Press International. January 5, 2019 இம் மூலத்தில் இருந்து January 5, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190105134420/https://www.upi.com/Top_News/2019/01/05/UPI-Almanac-for-Saturday-Jan-5-2019/9081546481545/. பார்த்த நாள்: September 6, 2019. "singer Iris DeMent in 1961 (age 58)" 
  2. Ankeny, Jason. "Iris DeMent Biography". AllMusic.com. Archived from the original on July 20, 2018. பார்க்கப்பட்ட நாள் September 6, 2019.
  3. "A birthday toast to Iris DeMent". January 4, 2011 இம் மூலத்தில் இருந்து September 6, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190906023217/https://www.thepitchkc.com/a-birthday-toast-to-iris-dement/. பார்த்த நாள்: September 6, 2019. 
  4. 4.0 4.1 Gross, Terry. "For Iris DeMent, Music Is The Calling That Forces Her Into The Spotlight". NPR's Fresh Air. National Public Radio. பார்க்கப்பட்ட நாள் 22 October 2015.
  5. "Iris DeMent: Ass-Kicking, Outlaw Country Singer Talks Growing Up in OC". August 9, 2012 இம் மூலத்தில் இருந்து July 14, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150714204653/http://blogs.ocweekly.com/heardmentality/2012/08/iris_dement.php. பார்த்த நாள்: August 11, 2012. 
  6. "The 37th Grammy Nominations". Los Angeles Times. January 6, 1995. http://articles.latimes.com/1995-01-06/entertainment/ca-17089_1_vocal-performance/3. பார்த்த நாள்: February 24, 2015. 
  7. Dougherty, Steve. "Church-Bred and Honky-Tonk Sanctified". https://www.wsj.com/articles/SB10000872396390444180004578016710436660922. 
  8. Masters, Clay (December 27, 2014) For Pieta Brown, Music Is A Father-Daughter Dance NPR Music. Retrieved June 9, 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரிஸ்_டிமென்ட்&oldid=4173777" இலிருந்து மீள்விக்கப்பட்டது